குமுளி மலைப்பாதை வழிவிடும் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 03:02
கூடலுார்; தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குமுளி மலைப்பாதையில் உள்ள லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் சிறப்பு பால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி முருகனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். பொங்கல் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தினர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். - கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பொங்கல், பழச்சாறு, அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.