பதிவு செய்த நாள்
11
பிப்
2025
03:02
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாகவும், காவடி, பால்குடம் எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று அதிகாலை சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காரைக்குடி தேவகோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்தும் சண்முகநாத பெருமான் கோயில்யில் செலுத்தினர். விடுமுறை நாளான நேற்று பல்வேறு, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக குன்றக்குடிக்கு வந்தனர். மேலும் காரைக்குடி கண்டனூர் பள்ளத்தூர் புதுவயல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.