சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலHல் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 05:02
சிவகாசி; சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பிப். 2 ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி புஷ்ப வாகனம், ரிஷப வாகனம் மயில்வாகனம் உள்ளிட்டவைகளில் எழுந்தருளி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் இன்று காலை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று செண்பக விநாயகர் கோயில் தெப்பத்தில் தெப்ப தேர் திருவிழா நடைபெறும். இதேபோல் திருத்தங்கல் முருகன் கோயில், சிவகாசி சிவன் கோயில் , மாரியம்மன் பத்ரகாளியம்மன், துர்க்கை அம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.