பதிவு செய்த நாள்
11
பிப்
2025
05:02
மேட்டுப்பாளையம்; சென்னா மலை ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் 49 ஆம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சிராஜ் நகர் அருகே உள்ள சென்னாமலை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது இக்கோவிலில் 49 ஆம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது நேற்று பத்தாம் தேதி திங்கட்கிழமை விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு முதல் 9 மணி வரை வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மோத்தே பாளையம் காளனூர் சிராஜ் நகர் இருந்து பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் மதியம் 12 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜையும் ஆராதனையும் நடைபெற்றது மதியம் 1:30 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் நிர்வாக குழு தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நிர்வாக குழுவினர் பாலச்சந்திரன், வெங்கடாசலம், வேலுமணி, அறங்காவலர்கள் முரளி பாபு, ரங்கசாமி முதலியார் ,பத்திர சாமி ,தேவராஜ், குப்புசாமி ,ஏகே செல்வராஜ் எம் எல் ஏ,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் உட்பட ஊர் பொதுமக்கள் பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னாமலை நகர் ,மோத்தேபாளையம் ,காளனூர் ,குத்தாரி பாளையம், வெள்ளி பாளையம் ஆலாங்கொம்பு ,தொட்ட பாவி ,ராமம் பாளையம் ஜடயம்பாளையம் ,ஜடையம்பாளையம் புதூர், பாலப்பட்டி கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நடைபயணமாக வந்து முயற்சி கடன் செலுத்தினர் விழாவில் வெள்ளி குப்பம்பாளையம் ரேணுகாண பஜனை குழுவினரின் பஜனை நடைபெற்றது.