பதிவு செய்த நாள்
15
பிப்
2025
07:02
தொண்டாமுத்தூர்; ஓமன் நாட்டில், தைப்பூசத்தையொட்டி, பேரூர் சதய விழா குழுவினர், திருமுருக பெருவிழா தமிழ் வேள்வி நடத்தினர். ஓமன் நாட்டில் உள்ள தமிழர் பண்பாட்டு நடுவம், செந்தமிழர் பாசறை இணைந்து, தைப்பூசத்தையொட்டி, திருமுருகப் பெருவிழாவை, மஸ்கட் நகரில் நேற்று கொண்டாட்டினர். இவ்விழாவில், முருகப்பெருமானுக்கு தமிழ் நெறிய தெய்வத்தமிழால் வேள்வி வழிபாடு, காவடி மற்றும் பால்குடம், திருத்தேர் வலம் வருதல், தமிழர் மரபு கலை நிகழ்ச்சிகள் என, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கோவையை சேர்ந்த பேரூர் சதய விழா குழுவை தானா சேர்ந்த சீனிவாசன், கிரீஸ் கிருஷ்ணன் ஆகியோர் தமிழ் வேள்வி வழிபாடு செய்தனர். பேரூர் சதய விழா குழுவினர், 5 ஆண்டுகளாக, பேரூரில், ராஜராஜ சோழனின் சதய விழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.