திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி நன்கொடை அளித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2025 12:02
திருப்பதி; மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த துஷார்குமார் என்ற பக்தர். திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நாள் தோறும் பல ஆயிரம் பக்தர்களுக்கு, மூன்று வேளையும் உணவு வழங்கும் அன்னதான திட்டத்திற்கு, 11 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். ‘பிரசித் யுனோ பேமிலி டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையை சேர்ந்த இவரை, திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் பாராட்டியுள்ளது. தற்போது தினமும், 14 டன் அரிசி, 10 ஆயிரம் லிட்டர் பால், ஆயிரக்கணக்கானோருக்கு மூன்று வேளையும் ருசியான உணவு வழங்குதல் என அன்னதான திட்டம், சிறப்பாக நடந்து வருகிறது. நன்கொடையாளர்கள் வழங்கும் நன்கொடை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வங்கி வட்டி வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.