அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2025 10:02
திருச்சி; லால்குடியை அடுத்த அன்பில் சுந்தரராஜபெருமாள் கோவிலில் மாசி மாத தங்க கருட சேவை சிறப்பாக நடைபெற்றது
லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுந்தரவல்லித்தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கீழ் செயல்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தங்க கருட சேவை திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் சேவை நடைபெற்றது. தொடர்ந்து மாலை தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.