வேங்கடாஜலபதி பெருமாள் – அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2025 10:02
புதுச்சேரி; கொம்பாக்கம் வேங்கடாஜலபதி பெருமாள் – அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கொம்பாக்கம் செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அலர்மேல் மங்கை சமேத வேங்கடாஜலபதி 12ம் ஆண்டு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை திருமஞ்சனம் நடந்தது. மாலையில் சீர்வரிசை எடுத்து வருதல், நிச்சயதார்த்தம், மாலை மாற்றுதல் மற்றும் நலங்கு வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு வேங்கடாஜலபதி பெருமாள் – அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி உமாபதி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.