Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காபி குடித்த ராமேஸ்வரம் ... ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மஹா சிவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் மஹா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

26 பிப்
2025
01:02

நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறும். நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலிலும் சிவ ராத்திரி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் 2022 ஆகஸ்ட் 21ல் நடைபெற்றது. இங்கு மூலவராக வீற்றிருந்து ஸ்ரீ கார்த்திகேயா பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ விநாயகா, ஸ்ரீ நவகிரகங்கள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆகிய விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரே கல்லில் வடிவமைத்துள்ள முருகனின் சிலை, 4.5 அடி உயரத்துடன் அம்சமாக வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார். இந்த மாதிரியான வடிவம், உத்தர பிரதேசத்தில், இக்கோவிலில் தான் உள்ளது! ஸ்ரீ வரசித்தி விநாயகர், ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரிது’! தெய்வீக சக்தி உள்ள இந்த பிள்ளையாரை காண, நொய்டா மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், 37 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாதிரியான மூர்த்தி, வட இந்தியாவில், இக்கோவிலில் தான் காணலாம்! ஒத்த எண்ணம் கொண்ட தென்னிந்திய மக்களால் துவங்கப்பட்ட இந்த வேதிக் பிரசார் சன்ஸ்தான், பல்வேறு ஆன்மிக, சமய மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இந்த இரண்டு கோவில்களிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இக்கோவிலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. செக்டார் 22ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலிலும் மஹா சிவ ராத்திரி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு கால பூஜையிலும் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், ஸ்ரீஸுக்தம், துர்கா ஸூக்தம் சொல்லி பல வாசனை திரவியங்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகத்துக்குப் பின், ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் மற்றும் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 


கோவிலுக்கு செல்லும் வழி: டில்லி விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ., துாரம், 35 நிமிடம் பயணம்புதுடில்லி ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., துாரம், 25 நிமிடம் பயணம்டில்லி மெட்ரோ: ப்ளூ லைனில் துவாரகா – நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி, செக்டார் 62இல் இறங்கி, கேட் 1ல் இருந்து வெளியேற கோவிலை அடையலாம்.தொடர்புக்கு : 98111 61370

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar