காபி குடித்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை; வீடியோ வைரல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 12:02
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் ராமலட்சுமி யானை தெற்கு ரத வீதியில் உணவகத்தில் காபி குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மாசி மகா சிவராத்திரி திருவிழா முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தினந்தோறும் நான்கு ரத வீதியில் சாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று சுவாமி, அம்பாள் கிழக்கு ரத வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதியில் வரும் போது முன்னதாக சென்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலின் ராமலட்சுமி யானை சாலை ஓரம் ஒரு தனியார் உணவகத்தில் யானைக்கு காபி வழங்கினார்கள் அதை யானைப்பாகன் ராமு வாங்கி யானைக்கு ஊட்டினார். அதை உற்சாகமாக யானை தலையை ஆட்டி குடித்தது. இதை கண்ட உள்ளூர் பக்தர்கள் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.