வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 04:02
வேலூர்; வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாக சாலையில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து, மஹா பூர்னாஹதிக்கு பின்னர் 1008 சங்குகளும் கொண்டு செல்லப்பட்டு, ஜலகண்டீஸ்வரருக்கு பால், தயிர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்தனர். பின்னர் 1008 சங்குகளில் உள்ள நீரை கொண்டு சங்காபிஷேகம் செய்து ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.