48 ஆண்டுகளுக்கு பின் வீரராகவ பெருமாள் கோவிலில் அனுமன் திருவீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2025 03:03
திருப்பூர்; திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், 48 ஆண்டுகளுக்கு பின், அனுமந்தராய சுவாமி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்திலுள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலையில், மூலவர் அனுமந்தராய சுவாமிக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. புதிதாக கேடயம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 48 ஆண்டுகளுக்குப்பின் நேற்று, அனுமந்தராய சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. பெருமாள் கோவில் முன் துவங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசிக்கடை வீதி உள்ளிட்ட ரத வீதிகள் வழியாக உற்சவர் திருவீதியுலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரத வீதிகளில், திரண்ட பக்தர்கள் அனுமந்தராயரை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.