பதிவு செய்த நாள்
04
மார்
2025
10:03
கோவை;கோவை சுண்டக்கா முத்தூர் பை பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பஞ்சமி திதி நாட்கள் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள். இன்று மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்கா முத்தூர் பை பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ளஸ்ரீ சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.