ராஜபாளையம்; ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசிமகம் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம் நடந்தது. ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசி மகம் பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு கொடி மரத்தின் கண் திறப்பு பூஜை ராமமந்திரம் இல்லத்தில் நடந்தது. காலை 9:00 மணி முதல் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைக்கு பின் கொடியேற்றப்பட்டது. மார்ச் 9ல் திருக்கல்யாணம், மார்ச் 10ல் தெப்ப திருவிழா மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் அம்பாள் சிம்ம, அன்னம், கிளி, காமதேனு வாகனத்திலும் சுவாமி கைலாச, கற்பக விருட்சம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.