மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா நாளை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 12:03
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. இக் கோயிலின் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.4ல் கொடிமரம் நடப்பட்டு, பிப்.26 முதல் திருவிழா துவங்கியது. நாளை 8ம் நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் படுக்க வைத்து பெண்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன், அக்னிசட்டி, பொங்கல் வைத்தல், மா விளக்கு எடுத்து வருகின்றனர். 24 மணி நேரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பூஜாரிகளுக்கு நோட்டீஸ்: கோயிலில் சில பூஜாரிகள் அதிகளவில் பணம் கொடுப்பவர்களுக்கு மாலை மரியாதை செலுத்தியும், நீண்ட நேரம் நிறுத்துகின்றனர். மற்றவர்களுக்கு தீபாராதனை காட்டுவதில்லை. விபூதி வழங்க தயங்குகின்றனர் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செயல் அலுவலர் வேலுச்சாமி கூறுகையில்,‘பக்தர்களிடம் பாகுபாடு காட்டும் சில பூஜாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்’, என்றார்.