கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி; தவக்காலம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2025 01:03
காரைக்குடி; காரைக்குடியில் உள்ள சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தவக்காலம் தொடங்கியது.
குருத்து ஞாயிறு அன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட சிலுவை அடையாள குருத்து ஓலையை எரித்து அதை சாம்பல் செய்து திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள் அதனை அர்ச்சித்து அனைவரது நெற்றியும் சாம்பலால் சிலுவை அடையாளம் இடுவார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் திருப்பலி அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி வரை நோன்பு இருந்து முக்கிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருவர். காரைக்குடி செக்சாலை தூய சகாய மாதா ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், பங்குத்தந்தை சார்லஸ் திருப்பலி நிறைவேற்றி சாம்பல் பூசி ஆசி வழங்கினர். செஞ்சை புனித குழந்தை தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை கிளமெண்ட் ராசா, சிவகங்கை மறைமாவட்ட பணியாளர் ஜான் மெல்க்கீஸ் சாம்பல் பூசி ஆசி வழங்கினர்.