Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றத்தில் பங்குனி ... கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி; தவக்காலம் தொடக்கம் கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நகர வீதிகளில் பவனி வருகிறது கோவை கோனியம்மன் தேர்
எழுத்தின் அளவு:
இன்று நகர வீதிகளில் பவனி வருகிறது கோவை கோனியம்மன் தேர்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
01:03

கோவை; கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இன்று மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கோலாகலமாக நடக்கிறது.


கோவையின் காவல்தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த 10ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 18ம் தேதி, பூச்சாட்டு விழாவும் நடந்தது. பிப்.,24 அன்று கிராமசாந்தி நிகழ்ச்சியும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. அன்றாடம் மேளதாளங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்கம்பத்தில், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், விநாயகர், சூலத்தேவர், அம்மன் கோவிலில் இருந்து சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. பிப்.,26 முதல், புலி, கிளி, சிம்ம, அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு அம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. வழக்கமான வைதீக முறைப்படி கலாசாரமும் பண்பாடும் மாறாமல், திருக்கல்யாண வைபவம் நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், மங்கல தாம்பூலம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று பகல் 2:05 மணிக்கு நடக்கிறது. ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர்நிலையை அடைகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்று, கோனியம்மனின் அருளை பெற, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar