Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி ... அரசு செலவில் ஆன்மிக பயணம் பயனாளிகள் எண்ணிக்கை உயரும் அரசு செலவில் ஆன்மிக பயணம் பயனாளிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

07 மார்
2025
10:03

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் மூலம் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மலைப்பாதை இரு வழிச்சாலையாக உள்ளதால், கோவில் நிர்வாகம் வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் நடுவில் இரும்பு தடுப்பு அமைத்து, ஒரு வழியாக வாகனங்கள் செல்வதற்கும், மற்றொரு வழியாக வாகனங்கள் கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். சில மாதங்களாக கார், ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, இறங்கும் வழியாக சில வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து நடந்தது வந்தது.


மூன்று தினங்களுக்கு முன் மலைக்கோவிலில் இருந்து திருமணம் முடிந்த புதுமண தம்பதி உள்பட நால்வர் ஆட்டோவில் மலைப்பாதையில் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு ஆட்டோ மலைக்கோவிலுக்கு செல்வதற்கு கீழே இறங்கும் வழியாக சென்றதால், ஆட்டோ ஓட்டுநர் மோதாமல் தவிர்க்க வாகனத்தை திரும்பிய போது, ஆட்டோ கட்டுப்பாடு இழந்து, தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று மலைப்பாதை ஏறும் நுழைவுப் பகுதி மற்றும் கீழே இறங்கும் நுழைவுப் பகுதி ஆகிய இடங்களில், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், ஆட்டோ, இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கீழே இறங்கும் பாதையில் ஏறிச் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்கு தொடரப்படும் என எச்சரித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டுநர்களும் கட்டாயம் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
திருச்சி; வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை கண்டு வழி நடுங்கிலும் பெரும் திரளான ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் பங்குனி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், ... மேலும்
 
temple news
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஊராளிபட்டியில் இருக்கும் திருவாடுதுறை மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar