பதிவு செய்த நாள்
07
டிச
2012
11:12
புதுச்சேரி: ரிஷிஸ் தியானம் சார்பில், வரும் 12ம் தேதிஅருட்பெருஞ்ஜோதியாகம், லாஸ்பேட்டையில் நடக்கிறது.ரிஷிஸ் தியானம் மகாயோகம் சார்பில், இந்தஅமைப்பின் பரமகுருநாதர் மகாமகரிஷி மரணமில்லாப் பெருவாழ்வுஎய்திய நாள் மற்றும் குருநாதர் குணாநிதியின்பிறந்த நாளை முன்னிட்டு,சிறப்பு யாகமாகஅருட்பெருஞ்ஜோதியாகம், சித்தர் முறைஅகன்ற ஒளியேற்றும்பூஜை, மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சிறப்பு யாகம்,வரும் 12ம் தேதி மாலை6 மணிக்கு, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.நிகழ்ச்சியில் பங்கேற்கஅனுமதி இலவசம். தங்களின்தொழில் வளர்ச்சி,குடும்பச் சிக்கல், தரித்திரசூழல், நோய் போன்றபல்வேறு பிரச்னைகள்தீரவேண்டி சிறப்புயாகம் மற்றும் பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும்,ஒரு சிறிய மண் அகல்விளக்கு மற்றும் பரிகாரப்பொருளாக நெய்கொண்டு வர வேண்டும்.