செங்கம்; திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை பள்ளி கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான கட்டுமான பணிக்காக பில்லர் அமைக்க பொக்லைன் வாயிலாக பள்ளம் நேற்று முன்தினம் தோண்டப்பட்டது. அப்போது, அப்பள்ளத்தில், ஆயிரமாண்டு பழமையாக கருதப்படும் சிவலிங்கம் கிடைத்தது. இந்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. அவர்கள் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். பின் அச்சிலை, அங்குள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.