திருப்பட்டினத்தில் மாசிமக திருவிழாவில் சமுத்திரக்கடலில் 6 பெருமாள் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2025 07:03
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமகா திருவிழாவை முன்னிட்டு நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜ பெருமாள், திருப்பட்டினம் விழிவரதராஜ பெருமாள், திருப்பட்டினம் ரகுநாத பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள். திருப்பட்டினம் பிரசன்னாவெங்கடோச பெருமாள், காரைக்கால் ரகுநாதர் பெருமாள் உள்ளிட்ட பெருமாள் ஆண்டு தோறும் தனித்தனிப் பல்லக்கில் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கலந்துகொள்ளுவது வழக்கம் ஆனால் இந்தாண்டு கோவில்களில் திருப்பணி நடைபெறுவதால் ஒரு சில பெருமாள் தீர்த்தவாரிக்கு செல்லவில்லை இதனால் நேற்று மாலை மாசிமகத்தையொட்டி பவலக்கால் சப்பரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் தங்க கருடவாகனத்தில் 6பெருமாள் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது முன்னதாக அதிகாலை மறைந்த முன்னோர்களுக்கு கடல்கரையில் திதிகொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ. எஸ். பி.சுப்ரமணியன்,பா.ஜ.க., பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கடல்கரை சூற்றி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் மேலும் கடல்கரையில் கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.