குறிச்சிகுளம் கற்பக விநாயகர் பொங்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 10:03
கோவை; பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளம் ஸ்ரீ கற்பக விநாயகர் -ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா கடந்த 11ம் தேதி கோவில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதன் முக்கிய நிகழ்வாக நாளை 18ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்வு நடைபெற உள்ளது. பின்னர் மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற உள்ளது.அடுத்ததாக மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது நிறைவாக மார்ச் மாதம் 21-03 - 2025அன்று மறுபூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.