மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி சோமவார சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 10:03
கோவை; பங்குனி முதல் சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் பங்குனி மாதம் முதல் சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு இன்று மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு தர்மலிங்கேஸ்வரர் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.