திருவண்ணாமலையில் நந்தி சிலை மீது சூரிய ஒளி; நிறம் மாறிய நந்தியின் தலை கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 12:03
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில் நந்தியின் தலை திடீரென நிறம் மாறியதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலை ஆண்டிற்கு சூரிய ஒளிக் கதிர்களால், தங்கமாக ஒளிரும் அதிசயத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள பிரசத்தி பெற்ற திருத்தலம் ரிஷபேஸ்வரர் கோவில். கோவில் ராஜ கோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்ட, அடுத்த சில நிமிடங்களிலே, நந்தீஸ்வரர் தங்கமாக மாறி காட்சியளிப்பார். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அதிசயம் நிகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம், 3ம் தேதி இந்த நிகழ்வு நடைபெறுவது சிறப்பு. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் நந்தி சிலை மீது சூரிய ஒளி பட்டதும் நிறம் மாறிய நந்தியின் தலை கண்டு பக்தர்கள் பரவசம் தரிசனம் செய்தனர்.