புதுச்சேரி: கருவடிக்குப்பம் குருசித்தானந்தா சுவாமி கோவிலில், வரும் 10ம் தேதி 108 சங்காபிஷேக விழா நடக்கிறது.காலை 6 மணிக்கு சங்கு பிரதிஷ்டையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், 9 மணி முதல் 11மணி வரை, 108 சங்காபிஷேகமும், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது. அபிஷேகத்திற்கு தேவைபடும் பொருட்களை தர விரும்பும் பக்தர்கள், 10ம் தேதி காலை 8 மணிக்குள் தேவஸ்தானத்தில் அளிக்கலாம்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் தேவஸ்தான குருக்கள் செய்து வருகின்றனர்.