செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகளை துவங்கினர்.செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, நவக்கிரக, குபேர மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜையும், 9 மணிக்கு புனித தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடந்தது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் கலந்து கொண்டனர்.நாளை (9ம் தேதி) காலை மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.