பகவத் கீதையை படிக்க முடியவில்லையே; படித்தாலும் புரியவில்லையே என நினைப்பவருக்கு பரிகார ஸ்லோகம் ஒன்று உள்ளது.
‘‘மமை வாம்ேஸா ஜீவலோக ஜீவபூத ஸனாதனா’ என்பதே அந்த ஸ்லோகம்.
‘‘நீங்கள் அனைவரும் என்னை (பகவான் கிருஷ்ணரை) தொடர வேண்டும். எனது அன்பு தெய்வீகமானதும், புனிதமானதும் ஆகும்’’ என்பது இதன் பொருள்.
இதன்படி எல்லா உயிர்களின் மீது அன்பு காட்டினால் மனத்துாய்மை உள்ளவர்களாக மாறுவோம். அப்போது எல்லா உயிர்களும் கிருஷ்ணரின் வடிவாகத் தோன்றும். ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ என நம்மாழ்வார் பாடிய மனநிலை வந்து விடும். அந்நிலையில் கீதையை முழுமையாக படித்த பலன் பெற்றவர் ஆவோம்.