அதர்மம் தலையெடுக்கும் போது தர்மத்தை நிலைநாட்டுபவர் மகாவிஷ்ணு. இவரது கையிலுள்ள சக்கரத்தையே ‘சக்கரத்தாழ்வார்’ என வழிபடுகிறோம்.
‘ஆதிமூலமே’ என்று அலறிய யானையை (கஜேந்திரன்) கூகு என்னும் முதலையிடம் இருந்து காப்பாற்றியது சக்கராயுதமே. அம்பரீஷன் என்னும் பக்தனை காக்க முனிவரான துர்வாசரை விரட்டியதும், கிருஷ்ணரின் எதிரியான சிசுபாலனின் கொன்றதும் இந்த சக்கரமே.
சனிக்கிழமையன்று சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் துன்பம், கடன், எதிரி பயம் நீங்கும். முயற்சியில் குறுக்கிட்ட தடை விலகும். வாகனப் பயணம் இனிதாகும்.