கோயில்களில் ‘அகண்டநாம ஜபம்’ நடப்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் பொருள் தெரியுமா... நேரம், காலம் பார்க்காமல் ஒரு வாரம், பத்து நாள், ஒரு மாதம் கூட தொடர்ச்சியாக பலர் கூடி கடவுள் நாமங்களை ஜபித்து பிரார்த்தனை செய்வதாகும். இதில் பங்கேற்றால் பணம், புகழ், ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். வாழ்விற்குப் பிறகு மோட்ச கதியும் கிடைக்கும். அகண்ட நாம ஜபம் எல்லா கோயில்களிலும் நடத்தினால் நாட்டுக்கே நன்மை கிடைக்கும்.