பதிவு செய்த நாள்
24
மார்
2025
11:03
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஏகாதச ருத்ர பாராயணம் நடந்தது.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் சத்ய சாயி பாபாவின், நூறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் சத்ய சாயி பாபாவின், 100வது பிறந்த ஆண்டை முன்னிட்டு,100 சிவ ஆலயங்களில், ருத்ர பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 21வது சிவ ஆலயமாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நேற்று ஏகாதச ருத்ர பாராயணம் நடந்தது. இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த, 300க்கும் மேற்பட்ட சாயி பக்தர்கள், சிறப்பு வழிபாடு செய்து, ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை 11 முறை ஓதும், ஏகாதச ருத்ர பாராயணம் மற்றும் கூட்டு பஜனை செய்தனர். வரும், நவம்பர் 23ம் தேதிக்குள், 100 சிவ ஆலயங்களில், ருத்ர பாராயணம் நடத்தி முடிக்கப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.