கடலுார்; தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், மஞ்சக்குப்பம் கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. மஞ்சக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, உறுப்பினர்களுக்கு பஞ்சாங்கம் வழங்கினார். இணை செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சேதுமாதவன் பஞ்சாங்க ஆண்டு பலன் குறித்து பேசினார். கோதண்டபாணி, பாலாஜி பங்கேற்றனர். பின், நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது. கடலுார் பிரம்ம தீர்த்த அறக்கட்டளை கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர் மோககண்ணன் நன்றி கூறினார்.