பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலாஹட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடந்தது. முதல் நாள் இரவு, 10:00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில், கோவில் தர்மகர்த்தா இல்லத்தில் இருந்து தெய்வீக வழிபாடுகளும் ஊர்வலமும் நடந்தது. இரண்டாம் நாள், மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல், தர்மகர்த்தா இல்லத்தில் இருந்து, ‘சில்லானை’ ஊர்வலம் புறப்படுதல், பிரசாதம் வழங்குதல், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் பங்கேற்ற கலாசார நடன நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தலைமையிலான கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.