பதிவு செய்த நாள்
27
மார்
2025
03:03
புதுச்சத்திரம்; பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் சுவாமி சிலைமீது சூரிய ஒளி படும், அதிசய நிகழ்வு நடப்பது வழக்கம். இந்த சூரிய உதய பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இந்தாண்டு சூரிய உதய பூஜை இனறு காலை நடந்தது. அதையொட்டி காலை 6.00 மணிக்கு பாலமுருகனுக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு, அபிஷேகம் நடந்தது. காலை 7.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.