திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2025 03:03
திருவாடானை; திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 30, 31 ல் பீமன் வேடம், மறுநாள் திருவிளக்கு பூஜை, ஏப்.2ல் காளி வேடம், மறுநாள் திரவுபதி அம்மன் வேடம், 4 ல் மகாபாரதம் கலைநிகழ்ச்சி, அன்று இரவு 10:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், மறுநாள் கொடியிறக்கம் நடைபெறும். விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான கட்டுரைபோட்டி, வினாடி வினா, மாறுவேடப் போட்டி நடைபெறும். விழா ஏற்பாடுகளை வடக்கு தெரு மக்கள் செய்து வருகின்றனர்.