பதிவு செய்த நாள்
27
மார்
2025
02:03
குன்னுார்: குன்னுாரில் துருவம்மன் கோவிலில் நவ சண்டியாகம் மற்றும், 108 சுமங்கலி பூஜை நடந்தது. குன்னுார் வி.பி., தெரு அமைந்துள்ள துருவம்மன் கோவிலில் மகா சண்டியாகத்தை தொடர்ந்து, மங்கள கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி மூலமந்திர ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி, நவகிரக ஹோமங்கள் நடந்தன. சுமங்கலி பூஜையை தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, திருமுறை பாராயணம், மகா ஆசீர்வாதம், விநாயகர் பூஜை, கோ பூஜை, மூல மந்திர சவுபாக்கிய திரவியம், பூர்ணாகுதி, மகா கும்ப கலச அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. விழாவில். 108 பெண்களுக்கு மகா சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம், அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்தனர்.