திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவிலில் திருகல்யாணம் வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2025 10:03
மயிலாடுதுறை; திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவிலில் திருகல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான வண்புருஷோத்தமன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில் வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம். இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 25ம் தேதி விமர்சியாக நடைபெற்றது. நேற்று சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் மனக்கோலத்தில் எழுந்தருளினார். மாப்பிளை பெண் அழைப்பு, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்து திருகல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.