காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2025 11:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை மாதந்தோறும் 20 நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடும் பணியில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம் . இந்நிலையில் கடந்த 41 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கணக்கிடும் பணியில் நேற்று புதன்கிழமை கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை ஈடுபட்டனர். அதில் தங்கம் 132 கிராம், வெள்ளி 715 கிலோ மற்றும் ரொக்கப் பணமாக இரண்டு கோடியே ஐம்பத்து எட்டு லட்சத்து, என்பத்து ஒன்பதாயிரத்து, ஐந்நூற்று பதினோரு ரூபாய்( ₹2,58,89,511) உட்பட வெளிநாட்டு பணம் 193 நம்பர் இருந்ததாக கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தெரிவித்தார்.