வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா; பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2025 03:03
மேலூர்; அ.வல்லாளப்பட்டி அரியப்பன்பட்டியில் உள்ள வடக்குவா செல்லியம்மன் பங்குனி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 15 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இன்று வெள்ளி மலையாண்டி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பெண்கள் வெண்கல பானையில் பொங்கல் பொருட்களை சுமந்து சென்று ஒன்றரை கி.மீ., தொலைவில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.