பதிவு செய்த நாள்
10
டிச
2012
03:12
கருணை மனதுடன் பிறருக்கு உதவும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன், குரு, சுக்கிரன் செயல்படுகின்றனர். உச்சம் பெற்ற செவ்வாய், சனியின் பார்வை ராசியில் பதிவதால் உத்வேகம், நீதி, நேர்மையுடன் செயல்படுவீர்கள். தாமதமான திட்டங்கள் செயல்பட ஆரம்பிக்கும். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்குகிற யோகம் உண்டு. தாயின் அன்பு, ஆசி பலமாக கிடைக்கும். புத்திரர் நற்குண, நற்செயல் பின்பற்றி படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர். அவர்கள் பெற விரும்பிய பரிசுப்பொருளை தாராள செலவில் வங்கித்தருவீர்கள். உடல்நலம் பலம் பெறும். எதிரிகளால் தொந்தரவு இருக்காது. தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். குடும்ப ஒற்றுமை சிறப்பாகும். உங்களின் நல்ல குணங்களை நண்பர் பாராட்டுவர். தொழிலதிபர்கள் திறமைமிகு பணியாளர்களின் ஒத்துழைப்பினால் உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். ஆதாய பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கில் புதிய சகாப்தம் படைப்பர். அதிக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் திறமையை நன்கு பயன்படுத்தி நேர்த்தியுடன் பணி இலக்கு நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்கள் பணியில் உருவான குளறுபடியை சரிசெய்வர். சலுகைகள் பெற அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் கருவிகள் வாங்குவர். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவை பெற்றுத்தரும். அரசியல்வாதிகள் சிறப்பாக சமூக சேவை புரிந்து ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவர். எதிர்பார்த்த பதவி பெற அனுகூலம் உண்டு. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து சிறந்த தேர்ச்சி விகிதமும் ஆசிரியரிடம் பாராட்டும் பெறுவர்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
உஷார் நாள்: 18.12.12 அதிகாலை 1.24 முதல் 20.12.12 காலை 7.23 வரை
வெற்றிநாள்: ஜனவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8.