துணிச்சலுடன் செயல்பட்டு புகழ்பெறும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு செயல்படுகின்றனர். உச்சம்பெற்ற செவ்வாயின் எட்டாம் பார்வை ராசியில் பதிவதால் மனதில் புத்துணர்வும் செயலில் நேர்த்தியும் அதிகரிக்கும். இதனால் திட்டமிட்ட வெற்றி இலக்கை அடைவீர்கள். தம்பி, தங்கையின் வாழ்வு சிறக்க தேவையான உதவி புரிவீர்கள். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி சிறப்பாக கிடைக்கும். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் உயர்நிலைக்குச் செல்லலாம். புத்திரர்களைக் கண்டிப்பதில் நிதான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. தம்பதியர் குடும்பத்தின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய சேர்ந்து திட்டமிடுவர். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி செழிக்கும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். சிலர் சொந்த பணிகளுக்காக தொழில் கூட்டமைப்பில் பெற்ற பதவியில் இருந்து விலகுவர். வியாபாரிகள் கவர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களிடம் ஆதரவு பெறுவர். விற்பனை உயர்ந்து உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சக பணியாளர்களின் அன்பு, உதவி கிடைத்து பணியில் ஆர்வமுடன் செயல்படுவர். சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு உறவினருடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பணிபுரியும் பெண்கள் நிம்மதியான மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை நேர்த்தியுடன் நிறைவேற்றுவர். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை அதிகரிப்பர். விற்பனை சிறந்து உபரி பணவரவு பெறுவர். அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும் பயிர்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். விவசாய நிலம் வாங்க யோகம் உண்டு. மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழில்வளர நல்ல வாய்ப்பு வரும். உஷார் நாள்: 20.12.12 காலை 7.23 முதல் 22.12.12 பிற்பகல் 3.48 வரை வெற்றி நாள்: ஜனவரி 6, 7 நிறம்: ஆரஞ்ச், வாடாமல்லி எண்: 1, 7
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »