நற்செயல் புரிவதில் ஈடுபாடு காட்டும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் ஏழாம் இடத்தில் பலம் குறைந்துள்ளார். புதனை சனி, ராகு மூன்றாம் பார்வையாக பார்க்கின்றனர். இதனால் உங்களின் செயல்பாடுகளில் குறை ஏற்பட வாய்ப்புண்டு. அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நல்லது. கேது வாழ்வியல் நடைமுறை சிறக்க தேவையான நற்பலன்களை வழங்குவார். பேச்சில் சிலநேரம் கடுமை ஏற்படலாம். கவனம்.தம்பி, தங்கைக்கு இயன்ற உதவி செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள நேரிடும். புத்திரரின் சேர்க்கை, சகவாசத்தை அறிந்து தக்க அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவீர்கள். உடல்நலம் திருப்தி தான் என்றாலும் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொள்வர். தொழிலதிபர்கள் மூலதனத்திற்கான பணமில்லாமல் திண்டாடுவர். உற்பத்தி, பணவரவு சராசரி அளவில் இருக்கும். வியாபாரிகள் கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருட்களை விற்பதால் கடன் வராமல் சமாளிக்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். குடும்பப் பெண்கள் குடும்பச் செவுக்காக சேமிப்பை எடுக்க நேரிடும். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் மனநிலை அறிந்து பேசுவதால் அதிருப்தி ஏற்படாமல் தவிர்க்கலாம். சலுகைப்பயன் கிடைப்பதில் தாமதமாகும். சுயதொழில் புரியும் பெண்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் மட்டுமே உற்பத்தி இலக்கை எட்ட முடியும். தொழிலுக்காக வங்கிக்கடன் பெற முயல்வர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகப் பணம் செலவுசெய்வர். விவசாயிகள் மிதமான மகசூல் பெறுவர். கால்நடை திருட்டைத் தவிர்க்க தகுந்த பாதுகாப்பை மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் நட்பு வட்டத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்கால நலன் கருதி படிப்பில் கவனம் வையுங்கள். பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்.
பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் பிரச்னை அனைத்தும் நீங்கி நன்மையுண்டாகும். உஷார் நாள்: 16.12.12 நாள் துவக்கம் - 17.12.12 பின்இரவு 1.24 மற்றும் 12.1.13 அதிகாலை 5.24 - 13.1.13 முழுவதும் வெற்றிநாள்: ஜனவரி 1, 2, 3 நிறம்: சிவப்பு, மஞ்சள் எண்: 3, 6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »