பிறரைக் கவரும் விதத்தில் செயலாற்றும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதனான புதன், குரு, சுக்கிரன் நற்பலன் தரும் கிரகங்களாக செயல்படுகின்றனர். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். சமூகப்பணியிலும் ஈடுபாடு உண்டாகும். தம்பி, தங்கை உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு தாய்வழியில் சொத்து கிடைக்கும். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுகிற கிரகநிலை உள்ளது. அவர்களை பக்குவமாக வழிநடத்துவது நல்லது.பூர்வ சொத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைக்காக கடன் பெற்றால் நம்பகமானவர்களிடம் பெறுவது நல்லது. கணவன், மனைவி ஒருவர் கருத்தை ஒருவர் மதித்து செயல்படுவர். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த அரசாங்க உதவியைப்பெற கடின முயற்சி தேவைப்படும். உற்பத்தி இலக்கு திட்டமிட்ட வகையில் நிறைவேறும். வியாபாரிகள் லாபவிகிதத்தைக் குறைத்து விற்பனையைத் தக்க வைத்துக் கொள்வர். வருமானம் திருப்திகரமான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் லட்சிய மனதுடன் பணிபுரிந்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர்.குடும்பப் பெண்கள் அன்றாட பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவர். வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்திட வாய்ப்புண்டு. பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு படிப்படியான வளர்ச்சி காண்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிர்ஷ்டவசமாக சில ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு.அரசியல்வாதிகள் சமூக சேவையில் ஆர்வம் கொள்வர். புதிய பதவி கிடைக்க யோகமுண்டு. விவசாயிகளுக்கு மிதமான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: மீனாட்சியம்மனை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உஷார் நாள்: 22.12.12 பிற்பகல் 3.48 - 24.12.12 பின்இரவு 2.29 வெற்றி நாள்: ஜனவரி 8, 9 நிறம்: நீலம், சிவப்பு எண்: 4, 7
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »