பதிவு செய்த நாள்
02
ஏப்
2025
11:04
பழநி; பழநி கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழநி கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ஆறு கால பூஜையில் நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை மற்றும் ரோப்கார், வின்ச் மூலம் கோயில் சென்றனர். ரோப்கார், வின்ச்சில் நீண்ட நேரம் காத்திருந்தனர். குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதானம் துவக்கம்: நேற்று முதல் பக்தர்களுக்கு திருக்கல்யாண மண்டபத்தில் தட்டில் கலவை சாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவை அன்னதானமாக வழங்குவது துவங்கியது. கோயில் இணைகமிஷ்னர் மாரிமுத்து துவங்கி வைத்தார். அன்னதானம் தொடர்ந்து அறுபது நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் முழுதும் அன்னதானத் திட்டமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.