ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதி பிரம்மோத்ஸவம்; அங்குரார்ப்பத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2025 11:04
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் அங்குரார்ப்பத்துடன் துவங்கியது. நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது.
வைணவ திவ்யதேசங்கள் 108ல் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான திருவரங்கம் திருக்கோயில் ஆதிபிரம்மோத்ஸவம் அங்குரார்ப்பத்துடன் துவங்கியது. விபீஷணாழ்வார் ஸ்ரீரங்க விமானத்தை அயோத்தியிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லுகையில் சந்திரபுஷ்கரணி கரையில் இறக்கி வைத்தார். உறையூரில் அப்பொழுது அரசனாயிருந்த தர்மவர்மா மறுநாள் பிரம்மா ஏற்படுத்திய உத்ஸவம் நடத்த வேண்டிய தினமாக இருந்ததால், தர்மவர்மா கோரிக்கையை ஏற்று விபீஷணாழ்வார் இந்த பிரம்மோத்ஸவத்தை நடத்த அனுமதித்தார் என ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும், லக்ஷ்மி காவியத்திலும் காணப்படுகிறது. பங்குனி ரோகிணி நக்ஷத்திரத்தில் கொடியேற்றம் செய்து பதினொன்று நாட்கள் இந்த உத்ஸவம் சிறப்புற நடைபெற உள்ளது. நாளை 03ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. பங்குனி தேர் (கோரதம்) 12ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நாளை முதல் 12ம் தேதி வரை விஸ்வரூப சேவை கிடையாது.