திருச்சி: சமயபுரம் கோயில் உண்டியல் அருகே பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரம் கோயில் இன்று காலை உண்டியல் அருகே 4 மாத பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் குழந்தையை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இக்குழந்தை, அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.