பதிவு செய்த நாள்
11
டிச
2012
10:12
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைதிறப்பு நேரங்கள் குறித்து கோயில் இணை ஆணையர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ் மாதமான மார்கழி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (டிச.16) துவங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-ல் நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6-7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிக்கால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7.00 மணிக்குள் இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும். முக்கிய விழா நாட்களான டிசம்பர் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கோவில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் ஜனவரி 14-ம் தேதி திங்கட்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.