சென்னை: வடபழனி ஆண்டவர் கோவில் குளம் சில மாதங்களுக்கு முன் வரண்டு நிலையில் இருந்து, தற்போது பெய்த மழையால் சிறிதளவு நீர் நிரம்பியுள்ளது. ஆனால், குளத்தை சுற்றியுள்ள கம்பி வேலிகள் உடைந்து இருப்பதால், அதன் வழியாக சிறுவர்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதனால், பாதுகாப்பு கேள்வி குறியாகி விபத்துக்கள் ஏற்படும் நிலைக்கு மாறியுள்ளன.