Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் ... போடி பரமசிவன் கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் போடி பரமசிவன் கோயிலில் கோலாகலமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா; நேர்த்திக்கடன் செலுத்த குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா;  நேர்த்திக்கடன் செலுத்த குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
10:04

இளையான்குடி; தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பங்குனி பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த குவிந்து வருகின்றனர்.


தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடம் தோறும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.இந்த வருடத்திற்கான விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து அம்மன் சிம்மம்,யானை,கிளி, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.பங்குனி மாதம் பிறந்ததிலிருந்தே தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டிகள்,ஆயிரம்கண் பானை,கரும்பாலை தொட்டில், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர்.இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மதுரை,திண்டுக்கல், அருப்புக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை, இளையான்குடி,மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பக்தன் இயக்கப்பட்டு வருகின்றன.இன்று பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நேற்று முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை நீண்ட வரிசையில் 2மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.நாளை 7ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர் பவனியும், 7ம் தேதி பால்குடம்,ஊஞ்சல் உற்சவம், பூப்பல்லாக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 8ம் தேதி திருக்கோயில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar