நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் (எ) ராஜராஜேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து 108 காவடிகள் சுமந்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். பின், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலிருந்து 504 பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். 10:30 மணிக்கு மலையாண்டவர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.