விழுப்புரம் ஆஞ்சநேய சுவாமி கோவிலில் 14ம் தேதி லட்சதீப உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 03:04
விழுப்புரம்; நுாற்றாண்டு பழமை வாய்ந்த விழுப்புரம் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாள்கள் நடைபெறும் லட்ச தீபத் திருவிழா, தமிழகத்திலேயே பிரசித்தி பெற்றதாக தொடர்ந்து வருகிறது. ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 101வது ஆண்டு லட்ச தீப மகோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வந்த நிலையில் 14ம் தேதி 5ம் நாள் விழாவாக, ஸ்ரீ விசுவாவசு தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி, லட்ச தீப விழா நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் கோவில் குளக்கரையில் லட்சதீபம் ஏற்றி வழிபடுவர். ஆஞ்சநேய சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல கஷ்டங்களும் நீங்கி மன அமைதியும், புத்தி கூர்மையும், தேக ஆரோக்கியமும், தைரியம் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களும், சுபிட்சமும் பெறலாம் கோவில் அர்ச்சகர் பத்மநாபாச்சார் தலைமையில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து 19ம் தேதி 10ம் நாள் விழாவாக, கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.